சுவிற்சாலந்தில் மனித உரிமைகள் மேலும் மேம்படுத்தப்படும் - வெளிநாட்டு அமைச்சு

#world_news
சுவிற்சாலந்தில் மனித உரிமைகள் மேலும் மேம்படுத்தப்படும் - வெளிநாட்டு அமைச்சு

சுவிஸ் பாராளுமன்றம் உள்நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு தேசிய மனித உரிமை நிறுவனத்தை உருவாக்கவுள்ளது.

சுவிஸ் மனித உரிமைகள் நிபுணர் மையம் 2011 இல் நிறுவப்பட்ட ஒரு முன்னோடித் திட்டத்திலிருந்து நிரந்தர திட்டமாக மேம்படுத்தப்படும்.

இந்த நிறுவனம் மனித உரிமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து தகவல் தெரிவி்க்கும். அத்துடன் அறிவுரை மற்றும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்வதேச உரையாடலை ஊக்குவிக்கும்.

உதாரணமாக வேலையில் மாற்றுதிறனாளிகள், குழந்தைகள் அல்லது LGBT சமூகத்தில் உள்ளவர்களின் உரிமைகளை உறுதி செய்வதாகும்.

சுவிஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இக்னாசியோ காசிஸ், இந்த கண்காணிப்பு நிறுவனம் சுவிட்சலாந்தின் நிலைப்பாட்டை உலகளாவிய அளவில் உயர்த்தும் என்று கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4