காற்றினால் பரவும் வைரஸ்களை கட்டுப்படுத்த முடியாது - ஆய்வில் தகவல்

#Corona Virus
Nila
4 years ago
காற்றினால் பரவும் வைரஸ்களை கட்டுப்படுத்த முடியாது - ஆய்வில் தகவல்

இரண்டு அல்லது ஆறரை மீற்றர்கள் இடைவெளி கொரோனா தொற்றை தடுக்க போதுமானதல்ல என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காற்றினில் இருந்து பரவும் வைரஸ்களை கட்டுப்படுத்த இந்த இடைவெளி போதுமானதல்ல என்பது வலியுறுத்தப்படுகின்றது.

முகக்கவசம் மற்றும் போதிய காற்றோட்டம் போன்ற ஏனைய கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மூன்று விடயங்களை ஆராய்ந்தனர்: வெளியிடத்தில் காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம்,உள்ளக காற்றோட்டம் வெவ்வேறு விதத்தில் எவ்வாறு பிணைந்துள்ளது மற்றும் பேசுவது மற்றும் சுவாசிப்பதன் மூலம் எவ்வாறு காற்று வெளியேற்றப்படுகின்றது என்பவையே அவை.

2 மீற்றர்கள் சமூக இடைவெளி பேணப்பட்டாலும் தொற்றுக்குள்ளான ஒருவர் முகக் கவசமின்றி பேசும் போது மற்றையவருக்கு ஒரு நிமிடத்தில் பரவக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது காற்றோட்டம் அற்ற உள்ளக பகுதியில் மிக விரைவாகவும் அதிக தூரத்திலும் கொவிட் வைரஸ் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து வெளியேறும் சுத்தமான காற்று அசுத்தமடைந்த காற்றை வெளியேற்ற மேல்நோக்கி தள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலை வீடுகளில் காணப்படும்.கலப்பு காற்றோட்ட முறையை விடவும் இவ்வாறான பகுதிகளில் மக்களின் சுவாசத்தின் வைரஸ்கள் 7 மடங்கு அதிகரித்து காணப்படும்.

கலப்பு முறை வர்த்தக கட்டடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.அதாவது உட்புறத்தில் இருக்கும் காற்றை வெளியேற்றி வெளியிலிருந்து வரும் காற்றை சுத்தப்படுத்தும் முறையாகும்.

எனவே அலுவலகங்களையும் விடவும் வீடுகளிலேயே காற்று மூலம் விரைவில் தொற்று பரவும் அபாயம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே காற்றோட்டத்தை அதிகரிக்கும் போது காற்றுமூலமாக தொற்றை அதிகளவில் குறைத்துக்கொள்ள முடியும் என்பது ஆய்வில் தெரியவந்த விடயமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4