பரிஸ் மருத்துவமனைகள் மீது சைபர் தாக்குதல்!

Keerthi
4 years ago
பரிஸ் மருத்துவமனைகள் மீது சைபர் தாக்குதல்!

பரிஸ் மருத்துவமனைகள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலை அடுத்து, 1.4 மில்லியன் நோயாளிகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளன.

இத்தகவலை l'Assistance publique-Hôpitaux de Paris (AP-HP) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கோடை காலத்தின் போது இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகவும், இல் து பிரான்சுக்குள் வசிக்கும் 1.4 மில்லியன் மக்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் படி, பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் l'Assistance publique-Hôpitaux de Paris (AP-HP) புகார் அளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆட்னு நடுப்பகுதியில் இல் து பிரான்சுக்குள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன என அறிய முடிகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4