சுவிட்சர்லாந்தில் கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

#Switzerland
Keerthi
4 years ago
சுவிட்சர்லாந்தில் கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தில், செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து, கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்திய மக்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் வைத்திருக்கும் மக்கள் தான், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களை, உணவக பணியாளர்கள் சரிபார்த்த பின்பே அனுமதிப்பார்கள். அதாவது, கொரோனாவால், வருமானத்தை இழக்கக்கூடாது, அதே சமயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், அதிகமாக செலவழித்து ஒரு உணவக உரிமையாளர், கேபிள் வாகனம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதில் ஒரு கேபினுக்குள், ஒரு மேஜை மட்டும் போடப்பட்டிருக்கிறது. கொரோனா சான்றிதழ் வைத்திருக்காதவர்கள், அங்கு சென்று சாப்பிடலாம். தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4