பிக் பொஸ் நிகழ்ச்சியில் இம்முறை கலந்துகொள்ளும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்

Nila
4 years ago
பிக் பொஸ் நிகழ்ச்சியில் இம்முறை கலந்துகொள்ளும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்

தென்னிந்திய தொலைக்காட்சி சேவையில் அநேக மக்களால் பார்க்கப்படும் சேனலாக விஜய் டிவி தன்னை அறிமுகப்படுத்தி வருவது என்னமோ உண்மை தான்.

அதிலும் அனைவரையும் ஈர்த்த நிகழ்ச்சியாக கடந்த சில வருடங்களாக நடந்துவரும் பிக்பொஸ் நிகழ்ச்சி.

ஆனாலும் விஜய் தொலைக்காட்சி புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் பொருட்டு சிற்சில நிகழ்ச்சிகளில் புலம்பெயர் தமிழர்களையும், இலங்கையில் இருந்தும் வரவழைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பங்குபற்ற வைத்து வருகின்றனர்.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாசிக்கா, புண்ணியா உட்பட இன்னும் சிலரை களமிறக்கிய விஜய் டிவி கடந்த 2019 சீசன் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து தர்ஷன், லொஸ்லியா என இருவரை நிகழ்ச்சியில் உள்ளக்கி ஏராளமான பார்வையாளர்களை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.

அடுத்த முறை நடந்த சீசனில் ஈழத்து மருமகன் என எல்லோராலும் கொண்டாடப்படும் அளவிற்கு நடிகர் ஆரியை களமிறக்கி இலங்கை கதைகளையும், அத்தான் என இலங்கையர்கள் கூறுவது போன்று உறவுமுறைமையும் கூற வைத்து, ஈழத்து மருமகள் என ஆரியின் மனைவியையும் ஒரு ராஸ்க் என பிக்பொஸ் வீட்டுக்குள் வரவழைத்து, பார்வையாளர்களை இன்னும் கூடுதலாக்கி கொண்டது விஜய் தொலைக்காட்சி.

இந்நிலையில், மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கும் பிக்பொஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யார் பங்குபற்றுவார்கள் என இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும் இலங்கையர்களும் உள்வாங்கப்படுவார்களா என புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் காக்க வைத்திருக்கும் பிக்பொஸ் சீசன் 5.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4