டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை: தடுப்பூசியைப் பெற இலங்கைக்கு அனுமதி கோரிக்கை!

#SriLanka #Lanka4 #Vaccine #Dengue #Permission #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
56 minutes ago
டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை: தடுப்பூசியைப் பெற இலங்கைக்கு அனுமதி கோரிக்கை!

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், "புதிய டெங்கு தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்னரே செலுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பு பெற முடியும்.

பல நாடுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், இலங்கையிலும் இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4