அமெரிக்க பாடசாலை உள்ளக பாதுகாப்பிலிருந்து பொலிஸ் படை நீக்கம்!

#world_news #School
அமெரிக்க பாடசாலை உள்ளக பாதுகாப்பிலிருந்து பொலிஸ் படை நீக்கம்!

ஐக்கிய அமெரகாவின் நியுயோக் நகரின் பாடசாலை அமைப்பு அதன் தாழ்வாரப்பகுதிகள் மற்றும் வகுப்பறைகளிலிருந்து பொலிஸாரை அகற்றத் தொடங்குகிறது.

இதனை வழங்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். இம்முறையானது கடுமையான நிற வேறுபாட்டுத் தண்டனைகளை தடுக்கும் என நம்பப்படுகிறது.

மொத்தத்தில் சுமார் 5000 நியுயோக் பாடசாலை பாதுகாப்பு முகவர்கள், நியுயோக் பொலிஸ் துறையின் மேற்பார்வையின் கீழ் கல்வித்துறைக்கு ஜுன் 2022 இல் மாற்றப்படுவார்கள். நகரத்தின் பாடசாலை அமைப்பபே அமெரிக்காவில் மிகப்பெரியது.

இந்த மாற்றம் ஏனைய அமெரிக்க நகரங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஓக்லாண்ட், கலிபோர்னியா மற்றும் மேடிசன், விஸ்கான்சின் போன்ற இடங்களில் உள்ள 33 பாடசாலை மாவட்டங்கள் ஜோர்ஜ் புளொயிட் கொலைக்குப்பிறகு இன நீதி போராட்டங்களின் எதிரொலியாக தமது பாடசாலை பொலிஸ் படையை விலக்கினார்கள் அல்லது பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடான உறவை மேற்கொண்டார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4