ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

#Rishad Bathiudeen #Court Order #Colombo
Prathees
4 years ago
ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ரிஷாட் பதியுதீனின்  மனைவி மற்றும் மாமனாரை பிணையில் விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலே இவர்கள்கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4