பிரித்தானிய றோயல் கடற்படைக்கு 170 மிலியன் யுரோக்கள் முதலீட்டில் நீர்மூழ்கிக்கப்பல்கள்!

#world_news
பிரித்தானிய றோயல் கடற்படைக்கு 170 மிலியன் யுரோக்கள் முதலீட்டில் நீர்மூழ்கிக்கப்பல்கள்!

பிரித்தானிய அரசாங்கம் புதிய தலைமுறை நீர்மூழ்கிக்கப்பல்களுக்கான தொழில்நுட்பத்தினை வளர்க்க 170மிலியன் யுரோக்களை அரச கடற்படையினருக்காக முதலீடு செய்யும் என அறிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலர் பென் வலஸ் இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தை குறிக்கிறது என்று கூறினார்.

இதற்காக இரண்டு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் 85 மிலியன் பவுண்ட்களில் பிஏஈ சிஸ்டம்ஸ் மற்றும் ரோல்ஸ் ரொய்ஸ் இற்கு மாற்று கப்பல்களுக்கான வடிவமைப்பு மற்றும் கருத்துப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த முதலீடு 350 வேலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும். இதில் 250 கும்பிரியா கப்பல் கட்டடத்திற்கும் 100 ரோலஸ் ரொயஸ் டெர்பிக்கும் வழங்கப்படவுள்ளன.

புதிய பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் இந்த றோயல் கடற்படையின் நீர்மூழ்கிகப்பல்களுக்கான வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களாக பிரித்தானியர்கள் இருப்பார்கள் என்று திரு. வலஸ், பரோ இன் புர்னஸ், கும்பிரியாவில் உள்ள பிஏஈ கப்பல் கட்டட பயணத்தின் போது தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4