பிரிட்டன் இளவரசர் பிலிப் உயில் 90 ஆண்டு 'சீல்' வைக்க உத்தரவு

Keerthi
4 years ago
பிரிட்டன் இளவரசர் பிலிப் உயில் 90 ஆண்டு 'சீல்' வைக்க உத்தரவு

'பிரிட்டன் இளவரசர் பிலிப் எழுதிய உயிலை, 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும்' என, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95. இவரது கணவர் இளவரசர் பிலிப், ஏப்., மாதம், 99 வயதில் மரணம் அடைந்தார்.

இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.இதன்படி அவரது உயிலில் உள்ள விபரங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, அதை 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன் உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இறையாண்மை மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் கவுரவத்தை பாதுகாக்க, தனி நபர்களின் தனிப்பட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அவசியமாக உள்ளது. எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. உயிலின் நகலை பதிவு செய்யவோ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பிரிட்டனில் எந்த ஒரு நபரின் உயிலும் பொது ஆவணமாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் அரச குடும்பத்தினரின் உயில் மட்டும், அதை சார்ந்தவர்களின் விருப்பத்திற்கு இணங்க உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சீல் வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4