குளோனிங் தொழில்நுட்பத்தில் மீண்டும் மம்மூத் யானைகள்: ரூ.110 கோடியில் புதிய முயற்சி

Keerthi
4 years ago
 குளோனிங் தொழில்நுட்பத்தில் மீண்டும் மம்மூத் யானைகள்: ரூ.110 கோடியில் புதிய முயற்சி

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிபடர்ந்த மிகவும் குளிரான பிரதேசங்களில் ‘மம்மூத்’ எனப்படும் அடர்த்தியான‌ ரோமங்களுடனும், பிரமாண்ட‌மான வளைந்த தந்தங்களுடனும் உயரமான‌ யானைகள் வாழ்ந்தன. காலப்போக்கில் அழிந்து போன இந்த யானையின் புதிய படிவங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவில் மம்மூத்தின் முழு உடலுமே கிடைத்தது. இதனால், ‘குளோனிங்’ முறையில் மீண்டும் இந்த யானைகளை உருவாக்க, கடந்த சில ஆண்டுகளாக‌ ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

உயிரி அறிவியல் மற்றும் மரபியல் நிறுவனமான கொலோசல், தொழில் முனைவோர் பென் லாம் மற்றும் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மரபியல் பேராசிரியரான ஜார்ஜ் சர்ச் உள்ளிட்டோர் இணைந்து, ரூ.110  கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.இதற்கு, சைபீரியாவில் கிடைத்துள்ள  மம்மூத் யானையின் புதைபடிமங்களில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு, தற்போது இந்த இனத்தை போன்ற தோற்றத்தை கொண்டுள்ள ஆசிய‌ யானைகளின் மரபணுவுடன் இணைத்து கருவாக மாற்றப்படும். அது, செயற்கை கருப்பையில் வைக்கப்பட்டு மம்மூத் யானை உருவாக்கப்படும் என சர்ச் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4