நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகிய மஹிந்த சமரசிங்க அமெரிக்கத் தூதுவராக நியமனம்

#SriLanka #Parliament
Yuga
4 years ago
நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகிய  மஹிந்த சமரசிங்க அமெரிக்கத் தூதுவராக நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார்.

எனவே, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

மேலும், மெக்ஸிகோ நாட்டுக்கும் இவரையே தூதுவராக நியமிப்பதற்கும் ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க விஜயத்தை ஆரம்பிப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மஹிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், அமெரிக்க தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவை கையாள அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவையென்ற அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க தூதுவர் ரவிநாத ஆர்யசிங்கவின் ஓய்வு அறிவிப்பு வெளியான நிலையில், அந்த பதவியை ஏற்க மஹிந்த சமரசிங்கவே சரியான நபர் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல தருணங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பாக அவர் செயற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அமெரிக்காவை கையாள அவர் பொருத்தமானவர் என அரசு தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4