கனடா ஒன்ராறியோவில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட நாய்க்குட்டிகள்....

#world_news
கனடா ஒன்ராறியோவில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட நாய்க்குட்டிகள்....

ஒன்ராறியோவில் Port Elgin பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நாய்க்குட்டிகளை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Port Elgin பகுதியின் பல இடங்களில் நாய்க்குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கைவிடப்பட்டதாக கருதப்படும் பிறந்த நாய்க்குட்டிகளைப் பற்றி தங்களுக்கு பல அழைப்புகள் வந்ததாக சாகீன் ஷோர்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 36 வயதான நபரை கைது செய்துள்ளதுடன், அவர் மீது மிருகங்களை கவனிக்க தவறியதாக கூறி 8 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரையில் எந்த விலங்குகளையும் அவர் கைவசம் வைத்திருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீட்கப்பட்ட நாய்க்குட்டிகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4