போதைப்பொருட்களுடன் அறுவர் வசமாக சிக்கினர்!

#Arrest #Police
Prathees
4 years ago
போதைப்பொருட்களுடன் அறுவர் வசமாக சிக்கினர்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றவளைப்புகளில் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 123 லீற்றர் மதுபானமும் 630 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுபானங்களைக் கொண்டுசெல்வதற்குப் பயன்படுத்திய ஒரு ஓட்டோவும், ஒரு செப்புத்தகடும் கைற்றப்பட்டுள்ளன.

விசேடமாக மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 3 கிராம் 620 மில்லிகிராம் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும், அலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரகம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெரகம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொஸ்லாந்தைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோமதியகல பிரதேசத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா சேனையை முற்றுகையிட்ட பொலிஸார் 12 ஆயிரம் கஞ்சா செடிகளை அழித்துள்ளனர். சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4