இலங்கையில் கொரோனா மரணங்கள் சடுதியாகக் குறைவடைவு!

#Corona Virus #Death
Keerthi
4 years ago
இலங்கையில் கொரோனா மரணங்கள் சடுதியாகக் குறைவடைவு!

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் நாளாந்த சாவுகளின் எண்ணிக்கை 100ஐ விடக் குறைவடைந்துள்ளது. நேற்று 84 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 33 பெண்களும், 51 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் இருவரும், பெண் ஒருவரும் என மூவர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்கள், 8 பெண்கள் என 23 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 58 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 34 ஆண்களும், 24 பெண்களும் அடங்குகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4