கிளிநொச்சி ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்குத் தடை!

#SriLanka #Kilinochchi #Lanka4 #vehicle #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சி ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்குத் தடை!

கிளிநொச்சி ஏ9 வீதியில் ஏற்படும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை அடிப்படையாகக் கொண்டு கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் பகுதி பகுதி: இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையான ஏ9 வீதிப் பகுதி.

நேரங்கள்:

காலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை

பகல் 01:00 மணி முதல் 02:00 மணி வரை

ரிப்பர் (Tipper) வாகனங்கள் உட்பட அனைத்துக் கனரக வாகனங்கள். கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இன்றைய தினம் (03) கிளிநொச்சி நகர்பகுதியில் காவல்துறையினரால் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சாரதிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிராந்தியத்திற்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் புத்திக குணசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4