அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உறவு துண்டிப்பு.: பிரான்ஸ் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை!

#France #Australia #United_States
Keerthi
4 years ago
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உறவு துண்டிப்பு.: பிரான்ஸ் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா-வின் உறவுகளைத் துண்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் பிரான்ஸ் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது.

சீனாவை அடக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் இணைந்து, ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை சமீபத்தில் தொடங்கியது. இந்த நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துகளை எடுத்து, இதற்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது. இவை இணைந்து, இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பிரான்சிடம் இருந்து டீசல் தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு ஆஸ்திரேலியா கடந்த 2016-ல் ஒப்பந்தம் செய்து இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்துடன் இணைந்து புதிய அமைப்பை தொடங்கிய நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதற்கு, ‘ஆஸ்திரேலியா எங்களின் முதுகில் குத்திவிட்டது’ என்று பிரான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா-வின் உறவுகளைத் துண்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் பிரான்ஸ் ஆலோசனை நடத்திவருகிறது. தங்களது அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4