சுவிற்சர்லாந்தில் 37 வருடங்களுக்கு முன் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக வீதி திறந்து வைப்பு

#Death #Switzerland #Accident #Tamil People #Road #Lanka4 #fire #L4
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் 37 வருடங்களுக்கு முன் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக வீதி திறந்து வைப்பு

37 வருடத்திற்கு முன் தீ தாக்குதலில் உயிரிழந்த 04 தமிழர்கள் நினைவாக Chur மாநிலத்தில் வீதி ஒன்று இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பேர்ன் சிவன் கோவில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா தமிழ்ப்பூசை முறைப்படி வழிபாடுகளை மேற்கொள்ள Chur நகரத்தின் முதல்வர் ஹான்ஸ்மார்டின்மியூலி நிகழ்வில் கலந்து கொண்டு உத்தியாக பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்தப்பகுதியில் ​1989ம் ஆண்டு ஜூலை 2ம் திகதி தமிழர் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல் ஒன்றில் நான்கு தமிழ் அகதிகள் உயிரிழந்தனர் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நினைவூட்டல் மற்றும் சமூக நீதிக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நாட்டு நகராட்சி சார்பில் ஒரு குறிப்பிட்ட பாதைக்கு மேற்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது. ​

இந்த தீ தாக்குதலில் கந்தையா பாலமுரளி, கந்தையா பாலமுகுந்தன், சத்திவேல் தம்பிராஜா, தேவராஜா சின்னத்தம்பி ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4