ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கும் விந்தைய இளைஞர்!

Keerthi
4 years ago
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கும் விந்தைய இளைஞர்!

" தூக்கம் " மனிதனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. சராசரி 8 மணி நேரம் நித்திரை அமைய வேண்டும் என்கிறது மருத்துவம்.  பலரது நோய் பிரச்சினைகள், மன அழுத்தம் ( Depression) ஆகியவற்றுக்கு நித்திரை குழப்பம், சரியான தூக்கம் இல்லாதது காரணம் என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்

ஆனால் ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி, வயது 36.  இவர் 'ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்' தலைவராக பதவி வகிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் உறங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார்.

துாங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது  குறித்து நுாற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகிறாராம். இதுகுறித்து தைசுகே ஹோரி கூறியதாவது:

எல்லாரையும் போல நானும் எட்டு மணி நேரம் தான் துாங்கிக் கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே துாங்கும் நேரத்தை குறைக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட துாங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4