காணி விற்பனை: மஹிந்தவுக்கு 100 கோடி இலஞ்சம் வழங்கப்பட்டதாக ஆணைக்குழுவில் முறைப்பாடு!
#SriLanka
#Mahinda Rajapaksa
#LANKA4
#land
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#Commission
Abi
2 months ago
ஷங்க்ரிலா ஹோட்டலுக்கு வழங்கிய காணி காலிமுகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகக் காணியை ஷங்க்ரி-லா ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில் 5 மில்லியன் அமெரிக்கன் டொலர் (சுமார் 100 கோடி ரூபாய்) இலஞ்சமாக பெறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் வதியும் தமிழரான சிதம்பரம் என்பவர் ஐந்து மில்லியன் டொலர் சுமார் இலங்கை ரூபாவில் 100 கோடி இலஞ்சமாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான பிரஜைகள் முன்னணியின் தலைவர் ஜாமுனி காமந்த துசார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இந்த பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் டி.பி.எல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பங்குதாரரான சிதம்பரம் என்பவர் சத்தியக் கடதாசி மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே