பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் 

#Basil Rajapaksa #Meeting
Prathees
4 years ago
பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் 

பால்மாவின் விலை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்று  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில்  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரித்துமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

இதனையடுத்து நிதியமைச்சருடன் நீண்ட நேரம் சந்தையின் நிலை மற்றும் இறக்குமதிக்கான வரி என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் இணங்கியுள்ளனர்.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மா 945 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதோடு குறித்த விலை அதிகரிப்பினை அடுத்து 1இ145 ரூபாவுக்கு ஒரு கிலோகிராம் பால்மா விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் விலை அதிகரிப்பு அடுத்த வாரம் வாழ்க்கை செலவு குழுவிடம் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4