தனது தந்தையின் கண்னை தோண்டி எடுத்த மகன்: மட்டக்களப்பில் கொடூரம்

#Batticaloa #Police #Arrest
Prathees
4 years ago
தனது தந்தையின் கண்னை தோண்டி எடுத்த மகன்: மட்டக்களப்பில் கொடூரம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கிய 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தனது கைகளால் தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கோர செயலுக்கு போதை வஸ்துப் பாவனையே காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவரது மகனை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4