10 ஆண்டுகளாக தனிமை தற்கொலைக்கு முயலும் திமிங்கலம்!

#world_news #Canada
Yuga
4 years ago
10 ஆண்டுகளாக தனிமை தற்கொலைக்கு முயலும் திமிங்கலம்!

கனடாவில் உள்ள சரணாலயத்தில் பத்து ஆண்டுகளாக தனிமையில் வசிக்கும் திமிங்கலம், விரக்தியில் தொட்டியில் தலையை மோதி வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கனடாவில், ஐஸ்லாண்ட் அருகே 1977 ஆம் ஆண்டு பிறந்த வோர்க்கா திமிங்கலம் ஒன்று 2 வயதில், கனடாவின் அண்டாரியோ மாகாணத்தில் உள்ள மெரிக்னாண்ட் கேலிக்கைப் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு கிஸ்கா என்று பெயரிடப்பட்டு, பிரம்மாண்ட தொட்டியில் வைத்து பராமரிக்கப்பட்டது.

மேலும், கிஸ்கா ஈன்ற ஐந்து குட்டிகளும், அதனுடன் இருந்த ஏனைய திமிங்கலங்களும் காலப்போக்கில் ஒன்றன் பின் ஒன்றாக இறந்ததால், கிஸ்கா பத்து ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகிறது.

வோர்க்கா திமிலங்கள் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை என்பதால், கிஸ்கா சக திமிங்களை அழைக்க அடிக்கடி ஓசை எழுப்பி ஏமாற்றத்துடன் ஓய்ந்து வருகின்றது.

இந்நிலையில், தனிமையை சகிக்க முடியாமல், கடந்த சில நாட்களாக தலையை தொட்டி மீது மோதி வரும் பரிதாப காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனால், 42 வருடம் தொட்டியில் வாழும் கிஸ்காவை கடலில் விடுமாறு கோரிக்கைகள் வலுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4