சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த உரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka
Yuga
4 years ago
சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த உரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பக்றீரியாக்கள் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதோடு, அவற்றால் ஏற்படக்கூடிய நோய்க்கு மருந்தும் கிடையாது.

எனினும் இவ்வாறான 95 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவிருந்ததோடு, இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4