ஆசிரியர்களுக்கு 5000 ருபா மேலதிக கொடுப்பனவு

#Sri Lanka Teachers
Prathees
4 years ago
ஆசிரியர்களுக்கு 5000 ருபா மேலதிக கொடுப்பனவு

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மேலதிகமாக 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்தார்.

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மாத்திரமே இந்த மேலதிக 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்குமாறு கோரி  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4