ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள்

Prasu
4 years ago
ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள், வௌிநாட்டு இரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரினங்களின் உடல் மாதிரிகளையும் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4