நீர்கொழும்பு பிரபல ஹோட்டலில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

#Negombo #Death
Prathees
4 years ago
நீர்கொழும்பு பிரபல ஹோட்டலில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கோவிட்  இடைநிலை சிகிச்சை மையமாக நடாத்திச் செல்லப்படும் நீர்கொழும்பு ஏத்துக்கால  ஹொட்டல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏத்துகலா ராணி பீச் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்  பிரேத பரிசோதனை நடாத்தி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு மருத்துவமனையின் தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு இன்று (19) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீர்கொழும்பு குடாபாடு பிரதேசத்தில் வசிக்கும்   டெரன்ஸ் பெர்னாண்டோ (36 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அங்கு ஹோட்டல் ஊழியராக பணியாற்றியுள்ளார்.

18 ம் திகதி இரவு குறித்த ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பி வராதது குறித்து அவரது உறவினர்கள் விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டலில் தேடிப்பார்த்தபோது அவரது ஆடைகள் குளியல் தொட்டியின் அருகே காணப்பட்டுள்ளன.பின்னர் குளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4