கோட்டாவுக்கு எச்சரிக்கை – யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

#Jaffna #Gotabaya Rajapaksa
Yuga
4 years ago
கோட்டாவுக்கு எச்சரிக்கை – யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

யாழ். தென்மராட்சி பகுதியில் திடீரென ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியினால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ‘ 52வது படைத்தளபதியும் கோட்டாபே அரசும் இணைந்து சாதிப் பிரச்சனையை மக்கள் மத்தியில் உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக நிறுத்தவும்’ என எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், கைதடி முதியோர் இல்லத்தின் எதிரிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் 4 இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதோடு, மாலை 4 மணியளவில் சுவரொட்டியை அவதானித்த படைத்தரப்பினர் உடனடியாக அதை அகற்றியுள்ளனர்.

எனினும், இந்த சுவரொட்டியை யார் ஒட்டிய நபர்கள் யார் என்பது குறித்த தகவலெதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4