14 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலி

#Police #Death
Prathees
4 years ago
14 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலி

வீரகெட்டிய பகுதியில் 14 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

மேலும்  சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4