இலங்கையில் மீண்டும் சீனிக்கு தட்டுப்பாடு?

#SriLanka #sugar
Yuga
4 years ago
இலங்கையில் மீண்டும் சீனிக்கு தட்டுப்பாடு?

நாட்டில் அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதம் வரை குறைத்துவிட்டு, தேவைக்கும் அதிகமானளவு சீனி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் பின்னர், சீனி இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்திருந்தது.

தற்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் சீனி தொகை எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கே போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாட்டுக்கு ஒரு மாதத்துக்கான சீனித் தேவைப்பாடு 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகும். தற்போது கைவசம் இருப்பது சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் வரையாகும்.

இந் நிலையில், சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்காலத்தில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4