வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம்: ஒருவர் மீது வாள்வெட்டு

#Jaffna #Attack #Police
Prathees
4 years ago
வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம்: ஒருவர் மீது வாள்வெட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில் நேற்று வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று நேற்று இரவு 7 மணியளவில் முதலியார் கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.

 இத்தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். 

அத்துடன் வேலிகளின் தகரங்கள் அடித்து பிடுங்கப்பட்டு வீடு ஒன்றின் கதவினையும் குறித்த குறித்த கும்பல் அடித்து உடைத்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தகவலறித்த பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த பகுதிக்குச் சென்று சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4