யாழ். சிறைச்சாலையில் 34 பேருக்குக் கொரோனா!

Prabha Praneetha
4 years ago
யாழ். சிறைச்சாலையில் 34 பேருக்குக் கொரோனா!

 

 

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த 34 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

39 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 பேருக்கு மாத்திரமே தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் 22 வயதுடைய பெண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து கடந்த 16ஆம் திகதி பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு நாட்களுக்குள் ஏனையவர்களுக்கும் பரவல் ஏற்பட்டிருக்கும் அபாயம் காணப்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4