இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா?

#SriLanka #luxury vehicle
Yuga
4 years ago
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா?

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இதுவரை வரவு செலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் “உற்பத்தி பொருளாதாரம்” என்ற தலைப்பில் பொருளாதார இலக்குகளை அடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

அடுத்த வருடமும் இந்த வருடம் போன்றே வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மின்சார கார்களை ஊக்குவிப்பதற்கும் தயாராகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அது தவிர, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும், இந்த ஆண்டை போன்று முடிந்தவரை இறக்குமதிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதில் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக பெரிய அளவிலான காணிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதே வரவு செலவு திட்டத்தின் முக்கிய நோக்கமாக காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4