புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ்

#world_news
புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ்

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது.

அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்து செய்துள்ளார்.

இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுதர் உறுதி செய்துள்ளார்.

மேலும் அவுகஸ் உடன்பாட்டால் பிரான்ஸ் கவலைப்படத் தேவையில்லை என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான அவுகஸ் உடன்பாடு கடந்தவாரம் கையெழுத்தானது.

இதன்படி நீர்மூழ்கிகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவத் தொழில்நுட்பங்கள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கப்படுகின்றன.

இதனால் பிரான்ஸுடன் அவுஸ்ரேலியா செய்து கொண்டிருந்த நீர்மூழ்கி உடன்பாடு இரத்து செய்யப்பட்டமை பிரான்ஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4