கனேடிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்.

#world_news
கனேடிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்.

சனிக்கிழமை இரவு கனடாவில் Regent Park பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நடந்த மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவத்திலேயே இருவர் காயங்களுடன் தப்பியுள்ளதும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த ரொறன்ரோ பொலிசார், 20 வயது கடந்த மூன்று இளைஞர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் இன்னொருவர் அதிக ஆபத்தின்றி காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் நால்வர் கும்பல் ஆயுதங்களுடன் குறித்த இளைஞர்களை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் மூவரும் அந்த கும்பலை திருப்பி தாக்கியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

மொத்தம் 50 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4