வீரகெட்டிய பகுதியில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான தகவல்

#Police
Prathees
4 years ago
வீரகெட்டிய பகுதியில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான தகவல்

வீரகெட்டிய கஜநாயக்ககம பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதலின் போது 14 வயது சிறுவனை சுட்டுக் கொன்றமை தொடர்பாக  மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடியநிலையில் , அவரை கண்டுபிடிக்க வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பக்கத்து வீடுகளில் வசிக்கும் உறவினர்கள் சில காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்தொடர்ச்சியாக நேற்று (19) இரவு மீண்டும் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் நபரொருவர் மற்றைய  குழுவிலுள்ள 14 வயது சிறுவனைச் சுட்டதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுவனுக்கு  இன்று 15 வது பிறந்தநாள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4