வடமாகாணத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கான உதவித்திட்டம்

#NorthernProvince
Prathees
4 years ago
வடமாகாணத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கான உதவித்திட்டம்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 500 கலைஞர்களுக்காக ஐயாயிரம் ருபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளது.

நீலன் திருச்செல்வம் அறைக்கொடை நிதியம் யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்வஸ்திக் கல்லூரியுடன் இணைந்து இந்த திட்டத்தினை மேற்கொண்டுள்ளது. 

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தென்மராட்சி, ஊர்காவற்றுறை, வேலணை, மருதங்கேணி, கரைச்சி, பூநகரி, கண்டாவளை, பளை,  மாந்தை மேற்கு, துணுக்காய், ஒட்டிசுட்டான், கரைதுறைப்பற்று, நெடுங்கேணி என மொத்தமாக 15 பிரதேச செயலக பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 500 கலைஞர்களுக்குகுறித்த வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்படவுள்ளது. 

குறித்த செயற்றிட்டம் மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ளது. 

மேற்குறித்த பிரதேசங்களிலுள்ள   கலைஞர்கள் குறித்த  பிரதேச செயலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு  ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4