இலங்கையில் பால்மா விலை தொடர்பான விசேட தீர்மானம்!

#SriLanka
Yuga
4 years ago
இலங்கையில்  பால்மா விலை தொடர்பான விசேட தீர்மானம்!

குறித்த விடயம் தொடர்பில், பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்களால் கோரப்பட்டது.

எவ்வாறாயினும் 200 ரூபாயில் பால்மா விலையை உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பால்மா விலை அதிகரிப்பு பற்றி நாளை மறுதினம்(23) வியாழக்கிழமை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

வாழ்க்கை செலவு பற்றிய குழு வியாழக்கிழமை கூடுகிறது.

இதன்போது பால்மா விலை அதிகரிப்புக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4