கனடா பெடரல் தேர்தலில் இலங்கைத் தமிழர் அமோக வெற்றி!

#world_news
கனடா பெடரல் தேர்தலில் இலங்கைத் தமிழர் அமோக வெற்றி!

கனடா பெடரல் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்ததில் கனேடிய  லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree ஆபார வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் பொது தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றே தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் Scarborough-Rouge Park தொகுதியில் போட்டியிட்ட Gary Anandasangaree மலைக்க வைக்கும் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் பதிவான 36,236 வாக்குகளில் Gary Anandasangaree 22,997 வாக்குகள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளார். இது 63.5% என தெரிய வந்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary வெறும் 20.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4