Bigg Boss Tamil Season 5 தொடங்கும் திகதி , நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இதோ !!

Prabha Praneetha
4 years ago
Bigg Boss Tamil Season 5 தொடங்கும் திகதி , நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இதோ !!

 தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் (Kamalhaasan) தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். 

இந்நிலையில் தற்போது இந்த ஐதாவது சீசன் எப்போது தொடங்கும் என பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது. அதன்படி பிக் பாஸ் 5 தொடங்கும் தேதி மற்றும் நேரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் அக்டோபர் 3ம் திகதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட  நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இதை ப்ரொமோ வீடியோவில் வெளியிட்டு இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4