கிண்ணியாவில் டிப்பர் வாகனம் மோதி ஸ்தலத்தில் ஒருவர் பலி

#Accident #Death #Police
Prathees
4 years ago
கிண்ணியாவில் டிப்பர் வாகனம் மோதி ஸ்தலத்தில் ஒருவர் பலி

கிண்ணியா பிரதான வீதி, வில்வெளி என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற  வாகன விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவை நோக்கி மோட்டார் சைக்கிளில்  பயணம் செய்த நபர் மீது  கிண்ணியாவில் இருந்து மணல் ஏற்றி தென் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

விபத்தில் குறித்த நபர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து, கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4