சுட்டுக் கொல்லப்பட்ட பேரனின் கல்லறைக்குச் சென்று தாத்தா செய்த காரியம்

#Death #Police
Prathees
4 years ago
சுட்டுக் கொல்லப்பட்ட பேரனின் கல்லறைக்குச் சென்று தாத்தா செய்த காரியம்

வீரகெட்டிய கஜநாயக்ககம பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 வயது பாடசாலை மாணவனின் இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்றது.

 தனது பேரனின் திடீர் மரணத்தை தாங்க முடியாமல் 67 வயதான தாத்தா பேரனின் கல்லறையில் விஷம் குடித்ததாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

19 ஆம் தேதி வீரகெட்டிய, கஜநாயக்கமவில் நிலத் தகராறு தொடர்பாக இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 14 வயது சிறுவன' சசிந்த நிம்சரவின் தாத்தா மொஹோட்டிகே ஜினதாஸா (67) என்பவரே விசம்அருந்தி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சசிந்தவின் இறுதிச் சடங்குகள் 22 ஆம் திகதி மாலை கஜநாயக்கமவில் செய்யப்பட்டன மற்றும் அவரது உடலை அடக்கம் செய்த பிறகு குழுவினர் கல்லறையை விட்டு வெளியேறினர்.

இதன்போது சிறிது நேரம் கல்லறையில் தங்கியிருந்த சசிந்தவின் 67 வயது தாத்தா, அவர் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விஷ போத்தலை எடுத்து கல்லறையில் அமர்ந்து குடித்துள்ளார்.

அருகில் இருந்த உறவினர்கள் இதனைக் கண்டு  தாத்தாவை சிகிச்சைக்காக வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.எனினும் தாத்தாசிகிக்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4