ராஜகிரிய போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சந்தேக நபர் சரணடைந்தார்

#Police #Colombo
Prathees
4 years ago
ராஜகிரிய போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சந்தேக நபர் சரணடைந்தார்

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரியஇ ஒபேசேகரபுர பகுதியில்  தப்பிச்சென்ற போதைப் பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த நபரை இம்மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக ராஜகிரிய - ஒபேசேகரபுர பகுதிக்கு வருகை போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டவேளை அவர் தப்பிச் செல்ல முற்பட்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த நபர் பயணித்த காரின் மீது பாய்ந்து அதனை நிறுத்த முயன்ற போதிலும் அவரை கீழே தள்ளிவிட்டு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரில் இருந்து கீழே விழுந்த பொலிஸ் அதிகாரி தலையில் மற்றும் காலில் காயமடைந்தார் மற்றும் அவரது தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டதுடன்  அவர் தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4