தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாற்றப்பட்ட கார்கள்

Keerthi
4 years ago
தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாற்றப்பட்ட கார்கள்

நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கார்கள் காய்கறித் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ள  சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த  ஊரடங்கைத் தொடர்ந்து  தலைநகர் பாங்கொக்கில் வசித்து வந்த ஏராளமான டாக்சி ஓட்டுனர்கள் தங்களது  சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ராட்சாப்ருக் (Ratchapruek) என்ற டாக்சி நிறுவனத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள 300 டாக்சிகளின் மேற்பகுதியின் மீது அங்குள்ள ஓட்டுனர்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்து, அதில் விளையும் காய்கறிகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4