திருகோணமலையில் ஜெலடினைட் மற்றும் டெட்டனேட்டர்களுடன் இளைஞன் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
திருகோணமலையில் ஜெலடினைட் மற்றும் டெட்டனேட்டர்களுடன் இளைஞன் கைது

முச்சக்கர வண்டியில் 27 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 493 டெட்டனேட்டர்களை எடுத்துச் சென்ற நபர்  ஒருவர் நிலாவெளி வேலூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலாவெளி பொலிஸாருக்கு நேற்று (24) கிடைத்த தகவலின் அடிப்படையில் கோபாலபுரம் கடற்படை தள உதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான வேலூரைச் சேர்ந்தவர்.

சந்தேக நபர் இன்று (25) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4