திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி: நபரொருவர் பலி

#Death
Prathees
4 years ago
திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி: நபரொருவர் பலி

முச்சக்கர வண்டியொன்று நேற்று  நண்பகலில்  திடீரென தீப்பிடித்து எரிந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்தில் மகவ பொலிஸ் பிரிவில் உள்ள கல்லேவ பிரதேசத்தில் கொன்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 73 வயதான கொன்வெவவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம்  தொடர்பாக மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4