இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பொருட்களின் விலை !

#SriLanka #prices
Yuga
4 years ago
இலங்கையில்  மீண்டும் அதிகரிக்கும் பொருட்களின் விலை !

பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி, பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போதே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறுமாயின், ஒரு கிலோகிராம் பால்மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.

அத்துடன், 50 கிலோகிராம் நிறைக்கொண்ட சீமெந்து மூடையின் விற்பனை விலை 1,050 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4