யாழ்ப்பாணம் அராலியில் விபத்து! நீண்ட போராட்டத்தின் பின்னர் சாரதி மீட்பு! (படங்கள்)

#Jaffna #Accident
Yuga
4 years ago
யாழ்ப்பாணம்  அராலியில் விபத்து! நீண்ட போராட்டத்தின் பின்னர் சாரதி மீட்பு! (படங்கள்)

யாழ். அராலி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற குறித்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையிலும் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பஸ்ஸில் பயணிக்கும்போது பஸ்ஸானது வேக கட்டுப்பாட்டை இழந்து அரசமரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் அறுவர் பயணித்த நிலையில் சாரதி படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த மூவரும் 1990 இலக்க அவசர அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதியின் இருக்கை பக்கம் விபத்து நடைபெற்றதால், சாரதியை நீண்ட போராட்டத்தின் பின்னரே மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4