கிளிநொச்சியில் வயோதிபர் கொரோனாவால் உயிரிழப்பு

Prabha Praneetha
4 years ago
கிளிநொச்சியில் வயோதிபர் கொரோனாவால் உயிரிழப்பு

கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சின்னத்துரை மகாலிங்கம் (வயது 73) என்ற முதியவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த முதியவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4