தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 334 பேர் கைது!

#SriLanka #Lockdown #Arrest
Yuga
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 334 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 334 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் நேற்று  விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 877 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 176 வாகனங்களில் நேற்று பயணித்த 329 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4